இனி இந்தத் துறைக்கும் டிஎன்பிசி தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம்! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
தமிழக அரசு தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் ஆவின் நிறுவனத்தில் உள்ள காலி பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் திருப்பூர், காஞ்சிபுரம், மதுரை, நாமக்கல், விருதுநகர், தஞ்சாவூர், திருவள்ளூர், தேனி, திருச்சி பால் உற்பத்தியாளர் ஒன்றியங்கள் மற்றும் சென்னையில் உள்ள ஆவின் தலைமையகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை 236 பேர் நேரடியாக பணியில் சேர்க்கப்பட்டனர்.
மேலாளர்கள் மற்றும் துணை மேலாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், இளநிலை பொறியாளர், தொழிற்சாலை உதவியாளர், ஓட்டுநர் பணியிடங்களுக்கு இவர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.இந்நிலையில் இந்த பணியிடங்களில் தகுதி இல்லாத பலரை நியமனம் செய்யப்பட்டு விதிகளை மீறி வேலை வழங்கப்பட்டதாக ஆவின் நிறுவனத்திற்கு புகார்கள் எழுந்தது.
இந்த புகாரின் அடிப்படையில் கடந்த ஆண்டு ஜூலையில் ஆவின் நிர்வாக இயக்குனர் கே எஸ் கந்தசாமி தலைமையிலான குழுவினர் பணி நியமனம் முறைகேடு தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வின் மூலம் விதிமுறைகளை மீறி பணியில் சேர்ந்ததாக மேலாளர் துணை, மேலாளர் உள்ளிட்ட 236 பேர் கடந்த ஜனவரி மாதம் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
அதனால் மேலாளர் துணை மேலாளர் தொழில்நுட்ப வல்லுநர் ஆகிய ஆவின் நிறுவனத்தில் உள்ள 26 வகையான மொத்தம் 322 காலி பணியிடங்களை நிரப்ப டிஎன்பிசி மூலம் தேர்வு வைக்கலாம் எனவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.