உலகம் முழுவதும் பேஸ்புக் டிவிட்டர் இன்ஸ்டாகிராம் திடீர் முடக்கம் டிவிட்டர் வெளியிட்ட தகவல்! 

0
226

உலகம் முழுவதும் பேஸ்புக் டிவிட்டர் இன்ஸ்டாகிராம் திடீர் முடக்கம் டிவிட்டர் வெளியிட்ட தகவல்! 

உலகெங்கிலும் ஆயிரக்கணக்கான பயனாளர்களின் ஃபேஸ்புக் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் திடீரென முடக்கப்பட்டுள்ளன.

சமூக வலைத்தளங்களான பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகியன அடிக்கடி தொழில்நுட்ப கோளாறுகளுக்கு ஆளாவது வழக்கம். இதனால் ஏராளமான பயனாளர்களின் கணக்குகள் இயங்காமல் முடக்கப்படும்.

இந்நிலையில் நேற்று சமூக ஊடக வலைத்தளங்களான பேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை உலக அளவில் ஆயிரக்கணக்கான பயனளர்களுக்கு திடீரென முடங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் உள்ள பயனாளர்களின் சமூக வலைத்தள கணக்குகள் தான் அதிகம் முடக்கப்பட்டுள்ளது.

இதில் பல பயனாளர்கள் தங்களால் புதிய ட்விட்களை பதிவிட முடியவில்லை என்றும், நீங்கள் ட்விட் அனுப்புவதற்கான தினசரி வரம்பை தாண்டி விட்டீர்கள் என்ற பிழை செய்தியையும் எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ட்விட்டர் குழு கூறுகையில், இந்த சிக்கலை பற்றி நாங்கள் அறிந்திருக்கிறோம். அதை சரி செய்வதற்கான முயற்சியில் தற்போது ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். உங்களில் சிலருக்கு டிவிட்டர் கணக்கு செயல்படாமல் இருக்கலாம். அதனால் ஏற்பட்ட சிக்கலுக்கு மன்னிக்கவும். இதை சரி செய்வதற்கு நாங்கள் விழிப்புடன் செயல்படுவோம் என்று ட்விட்டர் நிறுவனம் ஆதரவு தெரிவித்துள்ளது.

இதைப்போலவே பேஸ்புக்கில் 12000 பயனாளர்களின் கணக்குகளும் இன்ஸ்டாகிராமில் 7000 பயணம் பயனாளர்களின் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous articleவரும் 11 ஆம் தேதி முதல் இயக்கத்திற்கு வரும் இரட்டை அடுக்கு மின்சார பேருந்து! அரசு வெளியிட்ட அசத்தல் திட்டம்!
Next articleசிறை கைதிகளுக்கு வெளிவந்த சூப்பர் திட்டம்! இன்று முதல் அமல் அரசு வெளியிட்ட தகவல்!