சிம்மம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வீண் அலைச்சல் உண்டாகும் நாள்!!

0
357
#image_title

சிம்மம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வீண் அலைச்சல் உண்டாகும் நாள்!!

சிம்ம ராசி அன்பர்களே ராசி அதிபதி சூரிய பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு வீண் அலைச்சல் உண்டாகும் நாள். சந்திர பகவான் ராசிக்குள்ளே இருப்பதால் சங்கடமான நிகழ்வுகள் நடக்கும் என்பதால் அமைதியாக இருக்க வேண்டும். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவி இடையே சிறு சிறு பிரச்சனைகள் வரலாம் என்பதால் அனுசரித்து செல்வது அவசியம்.

வருமானம் வருவதில் காலதாமதம் ஆகலாம். உத்யோகத்தில் வீண் அலைச்சல் உறுதியாகும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக சில இழுபறி சூழ்நிலை அமையும்.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் அமைதியாக செயல்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்களுக்கு வாய்ப்புகள் வருவதில் காலதாமதம் ஆகலாம்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கும் மனதில் ஒரு வித குழப்பம் அச்சம் தோன்றும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம்.

மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண வேண்டும் என்றால் படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு மாற்று மருத்துவத்தை நாடுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு எடுக்கும் முயற்சிகள் சற்று இழுபறி ஆகலாம்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சந்தன நிற ஆடை அணிந்து குருபகவான் ஸ்ரீ சீரடி சாய்பாபாவை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.