ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்- வேட்புமனு வாபஸ் பெற இன்று கடைசி நாள்!

0
448
#image_title

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்- வேட்புமனு வாபஸ் பெற இன்று கடைசி நாள்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களுக்கு இன்று சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தேர்தல் நடத்தும் அதிகாரி தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த மாதம் 4ம் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகிற 27ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 31ம் தேதி முதல் 7ம் தேதி வரை நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு,  தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் போட்டியிடுகின்றனர். 

இடைத்தேர்தலில் போட்டியிட 96 பேர் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனர். இதில் 83 பேரின் வேட்புமனுக்கள் பரிசீலனைக்கு பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்நிலையில், வேட்புமனுவை வாபஸ் பெற இன்று மாலை 3 மணி வரை அவகாசம் உள்ளது. அதைத்தொடர்ந்து சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. வேட்பாளர் இறுதிப்பட்டியல் இன்று மாலை வெளியிடப்பட உள்ளது. வரும் 27ம் தேதி வாக்குப்பதிவு, மார்ச் மாதம் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தல் ஆணையத்தால் இடைத்தேர்தலுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட சின்னங்கள் வேட்பாளர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது. இதை வேட்பாளர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு, தங்களுக்கு பிடித்த 3 சின்னங்களை குறித்துக்கொண்டனர். இந்த சின்னங்களில் ஏதேனும் ஒன்று அவர்களுக்கு வழங்கப்படும். 

 

Previous articleதிமுகவினர் பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள்- பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
Next articleகூட்டத்தில் சிறுமியிடம் எல்லை மீறிய நபர்! தாக்கிய தாய் அதிமுக பிரச்சாரத்தில் ஏற்பட்ட சலசலப்பு! 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here