நாக்பூர் டெஸ்டில் அதிரடி! சதம் விளாசிய கேப்டன் ரோகித் சர்மா! 

0
451
#image_title

நாக்பூர் டெஸ்டில் அதிரடி! சதம் விளாசிய கேப்டன் ரோகித் சர்மா! 

நாக்பூரில் நடந்து வரும் பார்டர் கவாஸ்கர் முதலாவது டெஸ்ட் போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா சதம் அடித்துள்ளார்.

ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பார்டர் கவாஸ்கர் கோப்பை காண முதலாவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் உள்ள ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி இந்திய வீரர்களின் அதிரடி தாக்குதலை சமாளிக்க முடியாமல் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 177 ரன்கள் எடுத்தது.  இதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்திருந்தது.

இன்று தொடங்கிய இரண்டாவது நாள் ஆட்டத்தில்  இந்திய அணியின் கேப்டன் தொடக்க ஆட்டக்காரருமான ரோகித் சர்மா சதம் விளாசியுள்ளார். அவர் 171 பந்துகளில் சதம் அடித்துள்ளார்.

தற்போதைய நிலவரப்படி ரோஹித் சர்மா 120 ரன்கள் எடுத்து ரன்கள் அவுட் ஆகியுள்ளார். இதன்படி இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. ரவீந்திரநாத் ஜடேஜா 37 ரன்களுடனும் அக்சர் பட்டேல் ரன் ஏதும் எடுக்காமலும் தற்போது களத்தில் விளையாடி வருகின்றனர்.

Previous articleபக்தர்களின் கவனத்திற்கு முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை! திருப்பதி தேவஸ்தானம் போர்டு வெளியிட்ட அறிவிப்பு!
Next articleமூத்த குடிமக்களுக்கு வெளிவந்த ஹேப்பி நியூஸ்! இனி மாதம் ரூ 20,000 பெறலாம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here