பக்தர்களின் கவனத்திற்கு முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை! திருப்பதி தேவஸ்தானம் போர்டு வெளியிட்ட அறிவிப்பு!

0
247
First-come, first-served priority for devotees! Tirupati Devasthanam Board announced!
First-come, first-served priority for devotees! Tirupati Devasthanam Board announced!

பக்தர்களின் கவனத்திற்கு முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை! திருப்பதி தேவஸ்தானம் போர்டு வெளியிட்ட அறிவிப்பு!

பக்தர்கள் அதிக அளவு செல்லும் கோவிலாகவும், அதிக அளவு உண்டியல் காணிக்கை சேரும் கோவிலாகவும் இருப்பது திருப்பதி ஏழுமலையான் கோவில் தான். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலின் காரணமாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.

கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் தான் ஒரு சில கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் கொரோனா பரவல் முற்றிலும் குறைந்த நிலையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது. புரட்டாசி மாதம் என்றாலே திருப்பதி ஏழுமலையான் கோவில் பக்தர்கள் அதிக அளவு சாமி தரிசனம் செய்வார்கள்.

அந்த வகையில் கடந்த புரட்டாசி மாதம் கட்டுக்கடங்காத கூட்டம் வந்ததன் காரணமாக முன்னதாக இருந்த டைம் ஸ்லாட் டோக்கன் முறை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தற்போது தேவஸ்தானம் போர்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் மார்ச் மாதம் அங்க பிரதட்சணம் செய்வதற்கான டிக்கெட் நாளை வெளியிடப்பட உள்ளது.

இதற்காக தேவஸ்தானம் சார்பில் ரூ 300 தரிசன கட்டண சீட்டு மற்றும் அங்கப் பிரதட்சணம் செய்வதற்கான இலவச டிக்கெட் மாதம்தோறும் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. அந்த டிக்கெட்டை நாளை தேவஸ்தான இணையதள பக்கத்தில் வெளியிடப்பட இருப்பதால் பக்தர்கள் உடனடியாக முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

முதலில் பதிவு செய்யும் பக்தர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் ஆன்லைனில் இந்த டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் திருப்பதியில் தங்கும் விடுதிகளுக்கு பல மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Previous articleஉயிரை கூட பொருட்படுத்தாத மாணவிகள்! அரசு பேருந்தில் இப்படியா இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ!
Next articleநாக்பூர் டெஸ்டில் அதிரடி! சதம் விளாசிய கேப்டன் ரோகித் சர்மா!