சோகத்தில் இல்லத்தரசிகள்! அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!
கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்து வந்தனர். அதனால் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்தது. ஆனால் கடந்த ஆண்டு முதல் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடனே காணப்படுகின்றது. பண்டிகை தினங்களில் தங்கத்தின் விலை அதிகரித்தது.
நேற்று இரண்டாவது நாளாக தங்கம் விலை குறைந்தது.நேற்று தங்கம் கிராமுக்கு ரூ 8 குறைந்தது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்று 5682 ரூபாய்க்கு விற்பனையானது. மேலும் 24 கேரட் ஆபரண தங்கம் ஒருசவரன் ரூ 45,456 ரூபாய்க்கு விற்பனையானது.
அதனை தொடரந்து 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ 55 குறைந்து ரூ 5320 க்கு விற்பனையானது. மேலும் பவுன் ஒன்றுக்கு ரூ 440 வரை குறைந்து ரூ 42,560 க்கு விற்பனையானது. அதுபோலவே வெள்ளி விலையும் குறைந்தது.
இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு பவுனுக்கு ரூ 160 அதிகரித்தது. அதனால் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ 42,720 க்கு விற்பனை செய்யப்படுகின்றது.மேலும் சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 20 அதிகரித்து 5340 ரூபாய்க்கு விற்பனையாகின்றது. இதுமட்டுமின்றி வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.