நான்கு நாட்களே அவகாசம் உள்ளது! நுகர்வோரின் வீட்டிற்கே செல்லும் மின் ஊழியர்கள்!

0
326
Aadhaar linking with electricity connection is not mandatory.. Supreme Court's action order!!
Aadhaar linking with electricity connection is not mandatory.. Supreme Court's action order!!

நான்கு நாட்களே அவகாசம் உள்ளது! நுகர்வோரின் வீட்டிற்கே செல்லும் மின் ஊழியர்கள்!

கடந்த ஆண்டு முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.அதனை தொடர்ந்து மின்வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் தமிழகத்தில் அனைத்து மின் நுகர்வோருக்கும் மின் மானியமாக 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகின்றது. அதனை தொடர்ந்து பெற வேண்டும் என்றால் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதிக்குள் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க அவகாசம் வழங்கப்பட்டது. அப்போது பலரும் இணைக்காத காரணத்தால் அதற்கான காலவகாசம் ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அந்த அவகாசம் முடிவடையும் நிலையிலும் பலரும் இணைப்படவில்லை அதனால் இம்மாதம் 15 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது.

அந்த அவகாசம் முடிய இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் உடனடியாக மக்கள் அனைவரும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அறிவிக்கபட்டுள்ளது. மேலும் மின் ஊழியர்கள் ஆதாரை இணைக்காதவர்களின் வீட்டிற்கு நேரடியாக சென்று இணைத்து வருகின்றனர்.

Previous articleஅடுத்த அதிர்ச்சி! ஆப்கானிஸ்தான் தொடர்ந்து இந்தியாவிலும் ஏற்பட்ட நிலநடுக்கம்! 
Next articleஇந்திய சுழல் தாக்குதலில் சிக்கிய ஆஸ்திரேலியா அணி 91 ரன்களில் சுருண்டது! இன்னிங்ஸ் & 132 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!!