மாசி மாத சிறப்பு பூஜை! முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி தேவசம் போர்டு வெளியிட்ட அறிவிப்பு!
பக்தர்கள் அதிகளவு மாலை அணிந்து வரும் கோவில்களில் ஒன்றாக இருப்பது சபரிமலை ஐயப்பன் கோவில் தான்.ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படும்.அந்த வகையில் கடந்த கார்த்திகை மாதம் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது அப்போது அதிகளவு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
அப்போது கூட்ட நெரிசல் அதிகளவு காணப்பட்டது.அதனால் பெரியவர்கள்,சிறியவர்கள் ,பெண்கள் என அனைவருக்கும் தனித்தனி வரிசைகள் அமைக்கப்பட்டது.இந்நிலையில் தேவசம் போர்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் மாசி மாத பூஜைக்காக நேற்று மாலை ஐந்து மணிக்கு நடை திறக்கப்பட்டது.
மேலும் வரும் வெள்ளிக்கிழமை வரை நடை திறக்கபட்டிருக்கும். மாசி மாத தொடக்க நாளான இன்று காலை ஐந்து மணிக்கு நடை திறக்கப்பட்டு நெய் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.காலை 5 மணி முதல் 1 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் கோவில் நடை திறக்கபட்டிருகும்.
மாலை 5.30 மணிக்கு மகா கணபதி ஹோமம் மற்றும் இரவு 7.30 மணிக்கு உஷபூஜையும் நடைபெறும். வரும் 17 ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு உதயாஸ்தமய பூஜை, நெய் அபிஷேகம், சந்தன அபிஷேகம்,படிபூஜை,புஷ்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
மேலும் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கபடுவார்கள்.பூஜைகள் முடிந்து வரும் 17 ஆம் தேதி இரவு 10 மணிக்கு படை அடைக்கப்படும்.அதனை தொடரந்து அடுத்த மாதம் பங்குனி மாத பூஜைக்காக வரும் மார்ச் மாதம் 14 ஆம் தேதி மாலை மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டு இரவு நடை அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.