ரேஷன் கடைகளில் இனி இந்த முறையை தான் பின்பற்ற வேண்டும்! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!
தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் ஏழை எளிய மக்களுக்கு இலவசாமகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் மற்றும் தானியங்கள் வழங்கப்படுகின்றது.இந்த பொருட்கள் முன்னதாக ரேஷன் அட்டையில் உள்ள பெயரில் யார் வேண்டுமானாலும் சென்று கையெழுத்திட்டு பொருட்களை பெற்று கொள்ள முடியும்.
ஆனால் இவ்வாறு இருக்கும் பொழுது பல்வேறு குளறுபிடிகள் ஏற்படுகின்றது.அதனால் ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்து மக்கள் வாங்கி வருகின்றார்கள்.ஆனால் இந்த இயந்திரத்தில் அடிக்கடி கோளாறு ஏற்படுகின்றது.அதனால் ரேஷன் பொருட்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாக புகார் எழுந்து வருகின்றது.
அதனால் பயோமெட்ரிக் முறைக்கு பதிலாக கண் கருவிழி பதிவு செய்யும் முறை அறிமுகம் செய்யப்பட்டது.இந்தக் கண் கருவிழி பதிவு மூலம் பொருட்களை வழங்கும் முறையானது தமிழகம் முழுவதும் கொண்டு வரப்படும் என அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.
இந்நிலையில் பயோமெட்ரிக் உடன் கண் கருவிழி பதிவு மூலம் பொருட்களை வழங்கும் முறை சேப்பாக்கம்,திருவல்லிக்கேணி மற்றும் பெரம்பலூர் பகுதிகளில் தொடங்கப்படுகின்றது.இந்த திட்டம் விரைவில் தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டுவரப்படும் என தெரிவித்துள்ளார்.