விருச்சிகம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பொறுமை தேவைப்படும் நாள்!!

0
282
#image_title

விருச்சிகம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பொறுமை தேவைப்படும் நாள்!!

விருச்சிக ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பொறுமை தேவைப்படும் நாள். கணவன் மனைவி இடையே பிரச்சனைகள் எழலாம் என்பதால் அனுசரித்து செல்வது நல்லது.

வருமானம் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகலாம். உத்யோகத்தில் வீண் அலைச்சல் உண்டாக்கலாம். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக மனக்குழப்பங்கள் உண்டாகும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வருவதில் கால தாமதம் ஆகும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் ஒருவித குழப்பம் அச்சம் தோன்றும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் பரபரப்புடன் காணப்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வதற்காக உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்வது நல்லது.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் மந்தமான சூழ்நிலை உண்டாகும். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு பொறுமை கண்டிப்பாக தேவைப்படும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சந்தன நிற ஆடை அணிந்து குருபகவான் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleதுலாம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பொருளாதார நிலை உயரும் நாள்!!
Next articleதனுசு-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு விருந்து மாற்றும் கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here