இனி தேர்வு எழுதும் பொழுது இவ்வாறு செய்தால் ஆயுள் தண்டனை! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
திருநெல்வேலியை சேர்ந்த மாணவன் உயர்நீதிமன்ற மதுரைகிளையில் மனுதாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில் நான் 12 ஆம் வகுப்பு முடித்து கடந்த ஜூலை 17 ஆம் தேதி நடைபெற்ற இளநிலை மருத்துவர் படிப்பிற்கு நுழைவு தேர்வான நீட் தேர்வு எழுதினேன்.ஆனால் அதற்கான நீட் தேர்வு முகமை தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் கேள்விக்கான விடைகளை வெளியிட்டது.அதில் 720 மதிப்பென்களுக்கு 670 மதிப்பெண்கள் விடைகள் சரியாக இருந்தது.
ஆனால் ஓஎம்ஆர் விடைத்தாளில் என்னுடைய மதிப்பெண் 115 மதிப்பெண்கள் மட்டுமே வந்துள்ளது.இது நான் எழுதியது இல்லை என்னுடைய விடைத்தாள் திருடப்பட்டுள்ளது என கூறியிருந்தார்.இது போன்ற முறைக்கேடுகளை தடுக்க உத்தரகாண்ட் மாநில அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.அந்த உத்தரவில் தேர்வு எழுதுபவர்கள் தேர்வில் முறைகேடு செய்தால் அவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்க முடிவு செய்துள்ளது.
அவ்வாறு தேர்வு மோசடியில் சிக்கினார் ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என கூறியுள்ளது.ஆயுள் தண்டனை மட்டுமின்றி அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் ஆட்சேர்ப்பு தேர்வுகளில் கேள்வித்தாள் கசிவு மற்றும் குளறுபடி தடுக்க இவ்வாறான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது என அம்மாநில முதல்வர் கூறியுள்ளார்.இந்த சட்டத்திற்கான ஒப்புதலில் ஆளுநர் கையெழுத்திட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.