அடுத்த மாதம் திருமணம்:பெண்ணைப் பற்றி மனம் திறந்த யோகிபாபு!

Photo of author

By Parthipan K

அடுத்த மாதம் திருமணம்:பெண்ணைப் பற்றி மனம் திறந்த யோகிபாபு!

தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் யோகி பாபுவுக்கு அடுத்த மாதம் 5 ஆம் தேதி திருமணம் நடக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் வாராவாரம் வெள்ளிக்கிழமை வெளியாகும் படங்களில் கதை இருக்கிறதோ இல்லையோ யோகி பாபு கட்டாயமாக இருக்கிறார். அந்த அளவுக்கு பிஸீயாக படங்களில் நடித்து வருகிறார். லொள்ளு சபா மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான அவர் படிப்படியாக இன்று உச்ச நடிகராக வலம் வந்து கொண்டிருக்கின்றார். ரஜினி, விஜய், அஜித் என சூப்பர்ஸ்டார்களின் படங்களில் நடித்து முடித்துள்ள அவர் இரு படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவரை பற்றி அதிகமாக வெளியாகும் வதந்திகளில் ஒன்று யோகி பாபுவுக்கு நடிகையோடு திருமணம் என்பதுதான். இதுபோல பலமுறை பல நடிகைகளோடு அவருக்கு திருமணம் நடக்க இருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தன. அதை எல்லாவற்றையும் மறுத்த யோகி பாபு தனது திருமணம் விரைவில் நடக்குமென்றும் அதை நானே அறிவிக்கிறேன் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் இப்போது தனது திருமணம் பற்றி அறிவித்துள்ளார். அதில்’ பார்கவி என்ற எளிய குடும்பத்து பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள போவதாகவும், பெற்றோர் பார்த்த இந்த பெண்ணை வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி திருத்தணி முருகன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.

இவரது திருமணத்தில் திரையுலகினருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் சென்னையில் அடுத்து நடக்கும் வரவேற்பு விழாவில் திரை பிரபலங்கள் கலந்துகொள்வார்கள் என்றும் தெரிகிறது.