தனுசு-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் கூடும் நாள்!!

0
258
#image_title

தனுசு-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் கூடும் நாள்!!

தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் கூடும் நாள். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவி ஒற்றுமை அற்புதமாக உள்ளது.

வருமானம் வந்து சேர்ந்தாலும் செலவுகளும் வந்து சேரும். உத்தியோகத்தில் பணியிட மாறுதல்  சிலருக்கு உறுதியாகும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக பயணவாய்ப்புகள் மேம்படும்‌. அரசியலில் இருக்கும் நண்பர்கள் பயணங்களை மேற்கொள்வதால் மக்களின் செல்வாக்கு அதிகரிக்க பெறுவார்கள்.கலைத் துறையை சேர்ந்த நண்பர்கள் வெளியூர் கலை நிகழ்ச்சிகளுக்காக புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து மகிழ்வார்கள்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். குழுவில நிர்வாகத்தை கவனிக்க பெண்கள் கணவன் வீட்டாரை அனுசரித்து செல்வதால் சந்தோஷமான சூழ்நிலை காண்பார்கள். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். மூத்த வயதை சேர்ந்த நண்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு மாற்று மருத்துவத்தை நாடுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு எதிர் பார்த்த சலுகைகள் வந்து சேரலாம்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பல வண்ண நிற ஆடை அணிந்து எம்பெருமான் விநாயகர் பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleவிருச்சிகம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கவனமாக இருக்க வேண்டிய நாள்!!
Next articleமகரம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உற்சாகம் அதிகரிக்கும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here