அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இனி இந்த தகுதி இல்லையென்றால் ரேஷன் அட்டை கிடையாது!
பொதுவாகவே ஒவ்வொரு கும்பத்திற்கும் ரேஷன் அட்டை வழங்கப்பட்டிருக்கும். அதன் மூலம் அவரவர்களுக்கென ஒதுக்கப்பட்ட ரேஷன் கடைகளில் மலிவு விலையில் பொருட்கள் வழங்கப்படுகின்றது. மேலும் இந்த ரேஷன் அட்டை என்பது முக்கிய ஆவணமாகவும் உள்ளது. பொதுவாகவே தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் சலுகைகள் அனைத்தும் ரேஷன் அட்டையின் மூலமாக தான் மக்களுக்கு கிடைகின்றது.
அந்த வகையில் தற்போது கடந்த ஜனவரி மாதம் முடிந்த பொங்கல் பண்டிகைக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ 1000 ரொக்க பணம், பச்சரிசி, சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்கப்பட்டது. இதுமட்டுமின்றி திமுக ஆட்சிக்கு வந்தவுடன் குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ 1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது திமுக ஆட்சியில் உள்ள நிலையில் குடும்பதலைவிகளுக்கு ரூ 1000 வழங்கப்படும் திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கபடுகின்றது. இந்நிலையில் தற்போது அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் இந்திய குடிமகனாக இல்லாதவர்களுக்கு புதிய ரேஷன் அட்டை வழங்க கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளில் pos இயந்திரம் மூலம் மட்டுமே வேட்டி,சேலை வழங்க வேண்டும், ரேஷன் கடைகளில் இருப்பு வைத்துக் கொண்டு விநியோகம் செய்யாமல் இருக்க கூடாது என கூறியுள்ளது.திறக்கப்படாத கடைகள் குறித்து வட்ட வழங்கல் அலுவலரிடம் விளக்கம் கேட்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.