ச்சே நடிகை அனுஷ்காவிற்கு இப்படி ஒரு நோயா? அவரே கூறிய தகவல்!

0
360
Che actress Anushka has such a disease? The information he said!
Che actress Anushka has such a disease? The information he said!

ச்சே நடிகை அனுஷ்காவிற்கு இப்படி ஒரு நோயா? அவரே கூறிய தகவல்!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை அனுஷ்கா. இவர் பாகுபலி திரைப்படத்தில் நடித்ததால் உலகம் முழுவதும் பிரபலமானார். இந்நிலையில் நடிகை அனுஷ்கா தனக்கு அரியவகை நோய் ஏற்பட்டுள்ளது. அதனால் நான் மிகவும் பாதிப்படைந்துள்ளேன் என கூறியுள்ளார்.

அவர் கூறுகையில் தனக்கு சிரிப்பு வந்தால் அதை கட்டுப்படுத்தவே முடியாது. சிரிப்பது ஒரு வியாதியா என கேட்டால், நான் தொடர்ச்சியாக 15 முதல் 20 நிமிடங்கள் வரை விடாமல் சிரித்துக் கொண்டே தான் இருப்பேன். மேலும் ஒரு நகைச்சுவை பார்த்துவிட்டால் எனக்கு விடாமல் சிரிப்பு வந்து விட்டால் அடக்கவே முடியாது. அந்த நேரத்தில் படப்பிடிப்பை முடித்துக் கொள்ள வேண்டிய சூழலில் தான் ஏற்படுகின்றது.

அதுமட்டுமின்றி நான் சிரித்து கொண்டிருக்கும் நேரத்தில் படபிடிப்பில் இருப்பவர்கள் டிபன், ஸ்னாக்ஸ் போன்ற வேலைகளை முடித்து கொள்கின்றனர். அவரே கூறிய இந்த தகவல் தற்போது சமூக வலைதளத்தில் மிக வேகமாக பரவி வருகின்றது. மேலும் நடிகை அனுஷ்காவிற்கு இப்படி ஒரு வியாதி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை தீபிகா படுகோனே, சமந்தா, ஸ்ருதிஹாசன்,  மம்தா மோகன்தாஸ் போன்ற நடிகைகள் அரியவகை நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது அனுஷ்காவிற்கு அரியவகை நோய் இருப்பது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous article டைரக்டர் அட்லி மீது கடும் கோபத்தில் இருக்கும் பாலிவுட்  பிரபலம்! காரணம் இதுதானா? 
Next articleவெற்றி நடை போடுமா இந்தியா? நாளை இரண்டாவது டெஸ்ட் தொடக்கம்!