ஒட்டகத்தில் சென்று ஓட்டு கேட்பது கோமாளித்தனத்தின் உச்சகட்டம்- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

0
284
#image_title

ஒட்டகத்தில் சென்று ஓட்டு கேட்பது கோமாளித்தனத்தின் உச்சகட்டம்- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் புகார் மனு அளித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவினர் ஒட்டகத்தில் சென்று ஓட்டு கேட்பது கோமாளித்தனத்தின் உச்சகட்டம் என்று விமர்சித்தார். ஒட்டகத்தில் செல்வது சட்டப்படி தவறு என்றும் அவர் தெரிவித்தார். வீடு வீடாக சென்று, மளிகை பொருட்கள், பணம் உள்ளிட்டவற்றை ஆளுங்கட்சியினர் விநியோகம் செய்து வருகின்றனர். 

ஆளுங்கட்சி மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக மகத்தான வெற்றியை பெறும் என்று அவர் கூறினார். மேலும் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. பணத்தை கொட்டினால் வெற்றி பெற்றுவிடலாம் என அவர்கள் நினைக்கிறார்கள். அது முடியாது. வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை மக்கள் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். மவுன புரட்சி ஏற்படும். மவுன புரட்சி விடியா ஆட்சிக்கு பாடம் கற்று கொடுக்கும். என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.