பெண்களுக்கு வரவுள்ள அசத்தல் திட்டம்! உச்ச நீதிமன்றம் ஒப்புதல்!
உச்ச நீதி மன்றத்தில் வழக்கறிஞர் விஷால் திவாரி என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் மாதந்தோறும் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுகின்றது. அப்போது அவர்களுக்கு ஏற்படும் வலியை நினைவில் கொண்டு விடுமுறை அளிப்பதற்கான விதிமுறைகளை வகுக்க மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி நேற்று ஒப்புதல் வழங்கினார். மேலும் அந்த மனுவில் இங்கிலாந்து, சீனா, ஜப்பான்,தைவான், இந்தோனேசியா,தென்கொரியா போன்ற நாடுகளில் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு விடுமுறை வழங்கப்படுகின்றது என குறிப்பிடப்பட்டிருந்தது. அதனால் அந்த மனு உச்சநீதிமன்றத்தில் வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.
மேலும் கடந்த மாதம் கேரள அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த அறிவிப்பில் மாநில உயர்கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து பல்கலைகலங்களிலும் பயின்று வரும் மாணவிகளுக்கு மாதவிடாய் காலங்களில் விடுமுறை அளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முன்னதாக கேரள மாநிலத்தில் கொச்சின் அறிவியல் தொழில்நுட்ப பல்கலைகழகம் இந்த விடுமுறை நடைமுறையை அறிமுகம் செய்தது குறிப்பிடதக்கது.