இரண்டு வேலை பிரியாணி.. ரூ 2000!! ஓட்டு மட்டும் இரட்டை இலைக்கு போட்டுருங்க! இபிஎஸ் பரபரப்பு!!
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெறப்போவதையொட்டி,அனைத்து கட்சியினரும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வரும் பட்சத்தில் அதிமுக தென்னரசை வேட்பாளராக நிற்க வைத்து வாக்குகளை சேகரித்து வரும் நிலையில் இன்று எடப்பாடி பழனிச்சாமி களத்தில் இறங்கியுள்ளார்.
இன்று தென்னரசுவை ஆதரித்து பேசுகையில் எடப்பாடி அவர்கள் கூறியதாவது, திமுக ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் ஆன பொழுதும் மக்களுக்காக தற்பொழுது வரை ஒரு துரும்ப அளவிற்கு கூட எதுவும் செய்யவில்லை. இந்த தேர்தலில் மட்டும் திமுக அமைச்சர்கள் வீதி வீதியாக சென்று ஓட்டு கேட்கும் பட்சத்தில் முன்பெல்லாம் இவர்கள் எங்கே சென்றார்கள்?
தேர்தலுக்கு முன்பு ஒரு அமைச்சராவது உங்களை பார்த்திருக்கிறார்களா? அல்லது உங்கள் குறைகளை ஏதேனும் கேட்டிருக்கிறார்களா?? தற்பொழுது இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று மக்களோடு மக்களாக சேர்ந்து புரோட்டா சுடுவதும், பஜ்ஜி போடுவதும் வேலையாக வைத்திருக்கிறார்கள்.
அமைச்சராக பொறுப்பேற்று அதன் வேலையை பாருங்கள் என்றால், டி போண்டா, பரோட்டா என மாஸ்டர் வேலையை பார்த்து வருகிறார்கள். ஒவ்வொரு தொகுதியிலும் என்னென்ன குறைகள் உள்ளது அதனை கேட்டு அதனை தீர்க்கவே அமைச்சர்கள் உள்ளனர் அதனை விட்டு விட்டு டீ போண்டா போட தான் இவர்கள் இருக்கிறார்கள். இவ்வாறு வீதி வீதியாக ஒவ்வொரு அமைச்சர்கள் சென்று குறைகளை கேட்டறிந்தால், தற்பொழுது ஈரோடு மாவட்டம் குறைகள் இல்லாத மாவட்டமாக மாறி இருக்கும் ஆனால் அவ்வாறு யாரும் கேட்கவில்லையே என்று கூறினார்.
இதில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கிலும் கட்சிக்கு எந்த ஒரு ஆபத்தும் நெருங்கி விடக்கூடாது என்ற எண்ணத்திலும் சென்னையில் உள்ள அனைத்து அமைச்சர்களையும் ஈரோடு கிழக்கு தொகுதியில் குவித்துள்ளனர். அதேபோல ஏழை மக்களின் நிலையை புரிந்து கொண்டு அவர்களை விலைக்கு வாங்கி பட்டியலில் அடைப்பது போல் திமுகவினர் அடைத்த வைத்துள்ளனர். இதை பார்க்கும் பொழுது கிராமத்தில் ஆடு மாடுகளை தான் இப்படி அடைத்து வைப்பார்கள் அதுபோல இதுவும் உள்ளது.
அதேபோல நீ சரியான ஆம்பளையா இருந்தா.. மீசை வச்ச ஆம்பளையா இருந்தா.. வேட்டி கட்டனு ஆம்பளையா இருந்தா.. சூடு சொரணை வெட்கம், மானம் இதில் ஏதேனும் ஒன்று இருந்தால் மக்களை வெளியே விட்டு தேர்தலை சந்திக்க வேண்டும். அவ்வாறு சந்திப்பதற்கு ஆளும் கட்சிக்கு சக்தி இல்லை.
நான் இன்று பிரச்சாரம் செய்யப் போகிறேன் என்பதற்காக அப்பாவி மக்களின் நிலையை புரிந்து அவர்களுக்கு 2000 கொடுப்பதாக அழைத்து கூட்டத்தில் திமுகவினர் அமர வைத்துள்ளார்கள். என்னால் அவர்களுக்கு 2000 கிடைக்கிறது என்றால் மகிழ்ச்சி தான். மக்களிடமிருந்து திருடப்பட்ட பணம் மக்களுக்கு மீண்டும் சென்றடைகிறது. அதேபோல எதிர்க்கட்சியினர் இரண்டு வேலை பிரியாணி வழங்குகிறார்கள். மக்கள் நன்றாக சாப்பிடட்டும் ஆனால் ஓட்டு மட்டும் வரும் 27ஆம் தேதி இரட்டை இலைக்கு போட்டு விடுங்கள் என பேசியுள்ளார்.