முக்கிய அறிவிப்பு- நாளை நடைபெறுகிறது தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்!

0
421
#image_title

முக்கிய அறிவிப்பு- நாளை நடைபெறுகிறது தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்!

சென்னையில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி அறிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள  அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களிலும் இரண்டாவது அல்லது மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் இளைஞர்கள் அதிக அளவில் தனியார் துறையில் பணி நியமனம் பெற்று வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களும் இணைந்து 17.02.2023 நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகின்றன. இந்த வேலைவாய்ப்பு முகாம் சென்னை, கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெற உள்ளது. 

இந்த முகாமில் கலந்துகொள்ளும் வேலை தேடுபவர்கள் மற்றும் வேலையளிப்பவர்கள் தங்கள் விவரங்களை தமிழ்நாடு தனியார் துறை வேலைவாய்ப்பு இணையதளத்தில் http://www.tnprivatejcbs.tn.gtv.n பதிவேற்றம் செய்யவேண்டும். 8, 10, 12-ம் வகுப்பு ஐடிஐ, டிப்ளமோ, கலை. அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பிரிவில் ஏதாவது ஒரு டிகிரி ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஅன்பில் மகேஷிற்கே ஆப்பு வைக்கும் உதயநிதி!! உயிர் தோழனுக்கே இந்த கதியா??      
Next articleதமிழக மீனவர்கள் மீது கர்நாடக வனத்துறை துப்பாக்கி சூடு; ஒருவர் மாயம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here