தமிழக மீனவர்கள் மீது கர்நாடக வனத்துறை துப்பாக்கி சூடு; ஒருவர் மாயம்!

Photo of author

By Parthipan K

தமிழக மீனவர்கள் மீது கர்நாடக வனத்துறை துப்பாக்கி சூடு; ஒருவர் மாயம்!

Parthipan K

தமிழக மீனவர்கள் மீது கர்நாடக வனத்துறை துப்பாக்கி சூடு; ஒருவர் மாயம்!

தமிழ்நாடு கர்நாடகா எல்லையில் உள்ள பாலாற்றில் பரிசலில் மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் மீது கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தி உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் பல மீனவர்கள் தப்பித்து வந்துவிட்ட நிலையில் ஒரு மீனவரை மட்டும் காணவில்லை என்பதால் அவரது உறவினர்கள் அச்சத்தில் இருக்கிறார்கள்.

மேட்டூர் அருகே தமிழ்நாடு – கர்நாடகா எல்லை பகுதி அமைந்து இருக்கிறது. அங்குள்ள பாலாற்றில் மீன்பிடிக்க சென்ற தமிழ்நாடு மீனவர்கள் மீது கர்நாடக வனத்துறை அதிகாரிகள் துப்பாக்கியால் சுட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

காவிரி கலக்கும் பகுதியான பாலாற்றில் பரிசலில் சென்று மீன்பிடி தொழிலில் தமிழர்கள் ஈடுபட்டு வந்தபோது அங்கு வந்த கர்நாடக வனத்துறை அதிகாரிகள் தமிழ்நாடு மீனவர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த தமிழ்நாடு மீனவர்கள் அங்கிருந்து தப்பித்து வந்துவிட்டனர். இந்நிலையில் சேலம் மாவட்டம் கொளத்தூரை அடுத்து இருக்கும் கோவிந்தபாடியை சேர்ந்த ஒரு மீனவரை காணவில்லை என்று கூறப்படுகிறது. இதனால்  அவரது உறவினர்களும், சக மீனவர்களும் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். 

மீனவர் ராஜா கர்நாடக வனத்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. எனவே கிராம மக்கள் பாலாற்றிலும், பாலாறு வனப்பகுதியிலும் மீனவர் ராஜாவை தீவிரமாக தேடி வருகிறார்கள். தமிழ்நாடு மீனவர்கள் உயிர் பிழைப்பதற்காக அங்கேயே விட்டுச் சென்ற அவர்களின் பரிசல்கள் மற்றும் மீன்பிடி வலைகளையும் கர்நாடக வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

நேற்று மாலை கர்நாடக வனத்துறை அதிகாரிகள் மீண்டும் பாலாற்று கரையில் யாராவது துப்பாக்கிச் சூட்டில் இறந்து நீரில் மூழ்கி உள்ளார்களா என்று தேடிச் சென்று உள்ளார்கள். இதன் காரணமாக கர்நாடகா – தமிழ்நாடு எல்லையில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.