ரிஷபம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கவனமாக இருக்க வேண்டிய நாள்!!
ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பேசும் வார்த்தைகளில் சற்று கவனம் வேண்டும். முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. விலை வந்து பொருட்களை கையாளுவதற்கு கவனம் அவசியம். கணவன் மனைவியிடையே பேசும் வார்த்தைகளில் உசிதம் வேண்டாம். வாழ்க்கைத் துணை உறவினர்கள் சில நேரங்களில் உங்களுக்கு தொல்லைகளை தருவார்கள்.
வருமானம் வந்து சேர்வதில் கால தாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வீண் அலைச்சல் உருவாகுவதோடு மட்டுமல்லாமல் வேலை பளு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக சில இன்னல்கள் இடையூறுகள் வரலாம் என்பதால் தனி கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை வேண்டும்.
மாணவ மாணவிகள் கல்வியில் ஏற்றம் காண கடுமையாக பாடுபட வேண்டி வரலாம். அரசியல்வாதிகள் கவனமாக இருப்பது நல்லது. நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடுவார்கள். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வீண் மன குழப்பம் உண்டாகும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு உடலில் அசதி சோர்வு வந்து மறையும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.
இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஆரஞ்சு நிற ஆடை அணிந்து ஸ்ரீதேவி கருமாரியம்மன் வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.