கடகம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு குழப்பங்களை முறியடித்து வெற்றி காணும் நாள்!!

0
278
#image_title

கடகம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு குழப்பங்களை முறியடித்து வெற்றி காணும் நாள்!!

கடக ராசி அன்பர்களே ராசி அதிபதி சந்திர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பகை உணர் ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் இருந்து வந்த குழப்பங்களை முறியடித்து வெற்றி காண்பீர்கள். சக ஊழியர்களின் அணுகுமுறை உங்களை வியக்க வைக்கும். கணவன் மனைவி இடையே அதி அற்புதமான புரிதல் உணர்வு மேம்படும். கொடுத்த கடன்கள் வசூலாகி மனமகிழ வைக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வீர்கள்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக கூட்டாளிகள் உங்களுக்கு அனுகூலமான ஆலோசனைகளை வழங்குவார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மாணவ மாணவிகள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவார்கள். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக செல்லும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனுகூலமாக செயல்படுவார்கள்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் தனி மரியாதை கிடைக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராக ஆனந்தமாக காணப்படுவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான வெண்மை நிற ஆடை அணிந்து ஸ்ரீ சரஸ்வதி தேவியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleமிதுனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும் நாள்!!
Next articleசிம்மம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கணவன் மனைவியுடைய குழந்தைகள் மூலமாக கிடைக்கும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here