சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்; 53 பேர் பரிதாப பலி!

0
308
#image_title

சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்; 53 பேர் பரிதாப பலி!

சிரியாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 53 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆதிக்கம் தொடர்ந்து நீடித்து வருகிறது. மேலும் சில பயங்கரவாத அமைப்புகளும் சிரியாவில் செயல்பட்டு வருகிறது. இந்த பயங்கரவாத குழுவை ஒழிக்க சிரியா அரசு தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

அதேபோல், அமெரிக்காவும், இஸ்ரேலும் சிரியாவில் இருக்கும் பயங்கரவாதிகளை குறிவைத்து அப்போது வான்வெளி தாக்குதல்களையும்  நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த பயங்கரவாத அமைப்புகள் அடிக்கடி பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் பல அப்பாவி பொதுமக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், சிரியாவின் பாலைவனப் பகுதியான அல்-சொக்னாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நேற்று பயங்கர தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பொதுமக்கள் 46 பேர், ராணுவ வீரர்கள் 7 பேர் என மொத்தம் 53 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து சம்பவம் நடந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இது போன்ற தொடர் தாக்குதல்களால் சிரியா நாட்டு மக்கள் அச்சத்தில் உள்ளனர். 

 

Previous articleமகரம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு புதிய பாதை புலப்படும் நாள்!!
Next articleஇந்தியா-ஆஸ்திரேலியா 2வது டெஸ்ட் போட்டி- இன்று 2வது நாள் ஆட்டம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here