ராணுவ வீரர் கொலை.. இட்ஸ் கேஷுவல் என்ற பாணியில் பதில்!! ஆங்கில ஊடகத்திடம் உதயநிதியின் டாக்!!
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி எம்ஜிஆர் பகுதி சேர்ந்தவர் தான் ராணுவ வீரர் பிரபு, இவரை அதே பகுதியில் வசித்து வரும் அவரது உறவினர்கள் திமுக கவுன்சிலர் உதவி கொண்டு குடும்ப தகராறு காரணமாக கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அவ்வாறு கைகலப்பில் ஈடுபட்டதால் ராணுவ வீரர் பிரபு பரிதாபமாக உயிரிழந்ததை அடுத்து, இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கும் அளவிற்கு தள்ளியுள்ளது. ஏனென்றால் திமுக ஆட்சி என்றாலே ரவுடிசம் என்று மற்றொரு பெயரும் உள்ள நிலையில் தற்போது இந்த உயிரிழப்பு நடந்து உண்மை என்ற வகையில் வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது.
தற்பொழுது வரை ராணுவ வீரர் பிரபு உயிரிழந்ததற்கு முதல்வர் முதல் அக்கட்சி நிர்வாகிகள் வரை யாரும் வாய் திறந்து பேசவில்லை எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை.இதனால் எதிர்க்கட்சி முதல் பாஜக என அனைவரும் சரமாரியாக விமர்சனம் செய்து வருகின்றனர்.மேலும் இதுகுறித்து போராட்டங்களையும் நடத்துகின்றனர்.
தற்பொழுது ராணுவ வீரர் உயிரிழந்ததை அடுத்து திமுக கவுன்சிலர் சின்னசாமி அவரது மகன் சூரியமூர்த்தி மற்றும் குணாநிதி, ராஜபாண்டியன் என ஒன்பது பேரை கைது செய்துள்ளனர்.மேலும் ராணுவ வீரர் உயிரிழந்ததை அடுத்து அதற்கு காரணமானவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் போடக் கோரியும் இதர கட்சிகள் ரீதியாக பெரும் கோரிக்கை எழுந்து வருகிறது.
இன்று அமைச்சர் உதயநிதியிடம் ஆங்கில தனியார் ஊடக நிருபர் ஒருவர் இது குறித்து கேள்வி எழுப்பினார். ஆனால் அவர்களுக்கு தக்க பதிலளிக்காமல் சட்டரீதியாக நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இது அவர்களின் குடும்ப தகராறு என்று மலுப்பும் வகையில் பதில் கூறி அந்த இடத்தை விட்டு நழுவி உள்ளார். இவர் அந்த பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கு முறையாக பதில் அளிக்காத வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.