மீனம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழும் நாள்!!

0
323
#image_title

மீனம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழும் நாள்!!

மீன ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழும் நாள்.அயன சயன ஸ்தானம் ஆகிய விரய ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் செலவுகள் அதிகரிக்கும். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவியாக அற்புதமான புரிதல் உணர்வு மேம்படுவதால் வெளியிடங்களுக்கு சென்று மகிழ்வீர்கள்.

வருமானம் வந்து சேர்ந்தாலும் செலவுகளும் அதிகரிக்கச் செய்யும். உத்தியோகத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவம் நடைபெறும். தொழில் மற்றும் வியாபாரம் அற்புதமாக நடைபெறும். சிலருக்கு புதிதாக தொழில் தொடங்கும் வாய்ப்புகள் வந்து சேரும். அரசியலில் இருக்கும் அன்பர்களை எடுக்கும் முயற்சிகளில் வெற்றி அடைவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் ஒருவித சந்தோஷம் குடிகொள்ளும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குதூகலமாக காணப்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் சந்தோஷமான சூழ்நிலைகள் நிலவும். மூத்த வயதை சேர்ந்த நண்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக நடைபெறுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்துகொண்ட மகிழும் நாளாக இருக்கும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஆரஞ்சு நிற ஆடை அணிந்து ஸ்ரீ மகாலட்சுமி தாயாரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleகும்பம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு முயற்சி செய்ய வேண்டிய நாள்!!
Next articleநரம்புத் தளர்ச்சி பிரச்சனையா? கசகசா இருந்தால் போதும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here