தனியார் பள்ளியில் ஏழை மாணவர்களுக்கு இலவச கட்டாய கல்வி- ஏப்ரல் 20 வரை விண்ணப்பிக்கலாம்!

0
312
#image_title

தனியார் பள்ளியில் ஏழை மாணவர்களுக்கு இலவச கட்டாய கல்வி- ஏப்ரல் 20 வரை விண்ணப்பிக்கலாம்!

தமிழகத்தில் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி 25 சதவீத இட ஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் சேரும் ஏழை மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே செலுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மாணவ மாணவிகள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

இதற்கு தனியார் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்கள் 25 சதவீதம் பேர் விண்ணப்பிக்கலாம். அந்த வகையில் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்கள் பயில மார்ச் 20 முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

2023 – 24ம் ஆண்டுக்கான 25 சதவீத இடங்களுக்கு வரும் மார்ச் 20 முதல் ஏப்ரல் மாதம் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் ஏழை மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஅமெரிக்க அதிபர் தேர்தல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி போட்டி!!
Next articleஅட்டகாசம் செய்யும் காட்டு யானை! 12 நாளில் 16 பேரைக் கொன்ற கொடூரம்!