க்யூட் நுழைவு தேர்வு! இந்த பாடங்களின் தாள்களுக்கு கூடுதல் கால அவகாசம்!
மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை கலை அறிவியல் பட்டப்படிப்புகளில் சேர வேண்டும் என்றால் மத்திய பல்கலைக்கழகம் நடத்தும் நுழைவுத் தேர்வில் அதாவது க்யூட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்நிலையில் மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் யுஜிசி கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவித்ததன் அடிப்படையில் அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் பட்டப் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கை பிளஸ் டூ மதிப்பெண்கள் அடிப்படையில் அல்லாமல் கியூட் நுழைவுத் தேர்வு மூலமாக நடத்தப்பட்டு வருகின்றது.
மேலும் தமிழ்,ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில் இந்த க்யூட் தேர்வானது நடத்தப்படுகின்றது. நடப்பு கல்வி ஆண்டில் க்யூட் யூஜி தேர்வு வரும் மே 21ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இந்த தேர்விற்கு வரும் மார்ச் 12ஆம் தேதி வரைஇணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.
இந்நிலையில் யூஜி தேர்வில் கணிதம், கணக்குப்பதிவியல் தாள்களுக்கு கூடுதல் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.மேலும் கணக்குப்பதிவியல் தாள்களை எழுதும் மாணவர்களுக்கு 15 முதல் 20 நிமிஷங்கள் கூடுதல் அவகாசம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த தேர்வில் மொழிப்பாடம் உள்பட ஒரு மாணவர் தேர்வு செய்யும் அதிகபட்ச பாடங்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.