விரட்டியடித்த எடப்பாடி.. பாஜக வுக்கு ஜால்ரா வா அல்லது சின்னமா பாத தரிசனமா?? ஓபிஎஸ் யின் அடுத்தக்கட்ட பிளான்!!
இரட்டை தலைமை விவகாரம் தொடங்கியதுடன் ஓபிஎஸ் இபிஎஸ் என இரு அணிகளாக பிரிந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அவரது நிர்வாகிகளின் ஒருமித்த கருத்துடன் இடைக்கால பொதுச் செயலாளராக பதவி ஏற்றதை அடுத்து இதனை ரத்து செய்யும்படி பன்னீர்செல்வம் அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கின் தீர்ப்பானது இன்று வெளிவந்த நிலையில் பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றும் இடைக்கால பொது செயலாளர் ஆக எடப்பாடி தான் என்றும் உத்தரவு வெளியிட்ட நிலையில், அடுத்த பன்னீர் செல்வத்தின் நிலை என்ன என்று பலரது மத்தியிலும் கேள்வியாக இருக்கிறது.
இது அதிகாரப்பூர்வமாக வெளிவராத பொழுதே அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ஓபிஎஸ் அவர்கள் நீக்கப்பட்ட நிலையில் கட்டாயம் மீண்டும் அவர் கட்சிக்குள் வர வாய்ப்பே இல்லை என்பது ஆணித்தரமாக உறுதியாக விட்ட நிலையில் இவருக்கு பாஜக வாய்ப்பளிக்கும் என்று அடுத்தடுத்த சந்தேகங்கள் எழுந்துள்ளது.
இவ்வாறு கட்சிக்குள் செட் ஆகாத நபர்களை கவர்னர் ஆக்குவதையே பாஜக வேலையாக வைத்து வரும் நிலையில் கட்டாயம் இவருக்கு ஒரு கவர்னர் பதவிக்கு தற்பொழுது இருந்தே துண்டு போட்டு வைத்ததாக கூறுகின்றனர். இதற்கு மாறாக தேவர் இன வாக்குகளை இவர் மூலம் கவர பாஜக கட்சியில் இவருக்கு ஏதேனும் முக்கிய பொறுப்பு கொடுத்து தன்வசம் இழுத்துக் கொள்ளலாம் என்றும் கூறுகின்றனர். மற்றொருபுறம் சின்னம்மா காலில் எடப்பாடி போல் இவரும் நீங்களே கதி என்று வில அதிக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணமாகவே இருக்கிறது.