ஊராட்சித் துறையில் 97 காலிப்பணியிடங்கள்; ரூ.1.25 லட்சம் சம்பளம்! மிஸ் பண்ணிடாதீங்க!!

0
290
#image_title

ஊராட்சித் துறையில் 97 காலிப்பணியிடங்கள்; ரூ.1.25 லட்சம் சம்பளம்! மிஸ் பண்ணிடாதீங்க!!

 

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் பணிபுரிய 97 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த பணியிடங்களுக்கு மாதம் ரூ.25,000 முதல் தொடங்கி ரூ.1,25,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. 

 

இந்த பணி குறித்த விவரங்கள்

 

காலிப்பணியிடங்கள்:

 

திட்ட நிர்வாகி (தொழில் மேம்பாடு) – 13

திட்ட நிர்வாக (கணக்கு) – 18

திட்ட நிர்வாகி (திறன் மற்றும் வேலைகள்) -25

இளம் தொழில் வல்லுநர்கள் – 30

மாவட்ட நிர்வாக அதிகாரி – 2

திட்ட நிர்வாக (அக்கவுண்ட்ஸ் மற்றும் அட்மின்) – 1

திட்ட நிர்வாகி ( தொழில் நிறுவனங்களுக்கான நிதி விநியோகம்) – 1 செயல் அதிகாரி – 1 

வட்டார குழு தலைவர் – 6.

 

வயது வரம்பு:

 

திட்ட நிர்வாகி (தொழில் மேம்பாடு), திட்ட நிர்வாக (கணக்கு) மற்றும் திட்ட நிர்வாகி (திறன் மற்றும் வேலைகள்) பதவிகளுக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது 40 ஆக உள்ளது. 

 

இளம் தொழில் வல்லுநர்கள் பதவிக்கு விண்ணப்பிக்க 28 வயதிற்குள் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

மாவட்ட நிர்வாக அதிகாரி பதவிக்கு அதிகபட்ச  45 வயதாகவும், இதர பதவிகளுக்கு அதிகபட்ச வயது 53 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

கல்வித்தகுதி:

 

பதவிகளுக்கு ஏற்ற பாடப்பிரிவில் முதுகலை அல்லது இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

 

மேலும் குறைந்தது 4 முதல் 8 ஆண்டுகள் அனுபவம் தேவை. 

இளம் தொழில் வல்லுநர்கள் பதவிகளுக்கு Business Administration, rural management, business management, entrepreneurship development, social work, agriculture, automation, engineering, marketing, finance, HR என்ற பாடங்களில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

 

சம்பளம்:

 

திட்ட நிர்வாகி (தொழில் மேம்பாடு), திட்ட நிர்வாக (கணக்கு) மற்றும் திட்ட நிர்வாகி (திறன் மற்றும் வேலைகள்) ஆகிய பதவிகளுக்கு மாதம் ரூ.20,000 சம்பளம் வழங்கப்படும். 

 

இளம் தொழில் வல்லுநர்கள் பதவிக்கு ரூ.45,000 மாத சம்பளமாக வழங்கப்படும். 

 

மாவட்ட நிர்வாக அதிகாரி பதவிகளுக்கு ரூ.75,000 – 1,25,000 முதல் சம்பளம் வழங்கப்படும். 

 

இதர பதவிகளுக்கு ரூ.35,000 சம்பளம் வழங்கப்படும்.

 

விண்ணப்பிக்கும் முறை:

 

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க https://tnjobs.tnmhr.com/Landing.aspx என்ற இணையத்தளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

 

கடைசி தேதி:

 

இப்பணியிடங்களுக்கு மார்ச் 2 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Previous articleஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மருத்துவமனையில் அனுமதி
Next articleதிருப்பதி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு- இன்றே முன்பதிவு செய்துவிடுங்கள்!!