திருப்பதி கோவிலில் புதிய மாற்றம்! தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! 

0
392
#image_title

திருப்பதி கோவிலில் புதிய மாற்றம்! தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! 

திருப்பதி கோவிலின் தேவஸ்தானம் அங்கு புதிய மாற்றத்தை செய்துள்ளது. இது பற்றிய முக்கிய அறிவிப்பினை தேவஸ்தானம் இன்று வெளியிட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் அங்கு பிரசாதமாக லட்டு வாங்கிச் செல்வது வழக்கமாகும். இதை வழங்கும் முறையில் தற்பொழுது தேவஸ்தானம் மாற்றம் செய்துள்ளது.

அதுப்பற்றி  கூறப்படுவதாவது,

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. பிரபலமான இந்த லட்டுவை பக்தர்கள் மறக்காமல் வாங்கிச் செல்வது வழக்கமாகும்.

இந்த லட்டுவை பிரசாதம் வாங்கி செல்வதற்காக பக்தர்களுக்கு தேவஸ்தான நிர்வாகம் சார்பில் பிளாஸ்டிக் பைகள், துணிப்பைகள், பேப்பர் பைகள் ஆகியவற்றை விற்பனை செய்து வருகின்றது. இதையடுத்து, இனிமேல் பக்தர்கள் லட்டு பிரசாதம் வாங்கி செல்வதற்காக  அவர்களுக்கு ஓலை பெட்டிகளை விற்பனை செய்ய தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

அதற்காக பனை ஓலை, தென்னை ஓலை ஆகியவற்றால் தயார் செய்யப்பட்ட ஓலைப் பெட்டிகளை வழங்கும் கவுண்டர்கள் அமைத்து பக்தர்களுக்கு விற்பனை செய்யவும் தேவஸ்தான நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. 

தேவஸ்தான அதிகாரி தர்மா ரெட்டி கூறுகையில், பத்து ரூபாய், 15 ரூபாய்,  20 ரூபாய், ஆகிய மூன்று அளவுகளில் ஓலை பெட்டிகளை லட்டு வாங்குவதற்காக பக்தர்களுக்கு விற்பனை செய்ய தேவஸ்தான முடிவு செய்துள்ளதாக செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதோடு கிராம மக்களுக்கும் வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் அவர் கூறினார்.

Previous articleஇபிஎஸ் யின் இடைக்கால பொதுச்செயலாளர் பதவிக்கு ஆப்பு.. ஓபிஎஸ் யின் பலே திட்டம்!!   
Next articleகாதலியுடன் நெருங்கி பழகிய மாணவர்! காதலனால் நேர்ந்த கொடூரம்!