மேகாலயா, நாகாலாந்தில் சட்டசபை தேர்தல்- வாக்குப்பதிவு தொடங்கியது!

0
329
#image_title

மேகாலயா, நாகாலாந்தில் சட்டசபை தேர்தல்- வாக்குப்பதிவு தொடங்கியது!

மேகாலயா, நாகாலாந்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் சட்டசபைகளின் பதவிக்காலம் முடிவடைவதையடுத்து இந்த மாநிலங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. மேகாலயாவில் 60 தொகுதிகளுக்கும், நாகாலாந்தில் 60 தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இரு மாநிலங்களிலும் பாஜக, காங்கிரஸ், போன்ற முக்கிய கட்சிகள் , மற்றும் சிறிய கட்சிகளும் நேற்று முன்தினம் வரை பிரச்சாரம் செய்துவந்தனர். இந்த நிலையில், மேகாலயா, நாகாலாந்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர். மூத்த வாக்காளர்களும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இரு மாநிலங்களில் அமைதியான வாக்குப்பதிவை உறுதி செய்வதற்காக ஏராளமான பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். வரும் மார்ச் மாதம்  2ம் தேதி இந்த தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.

 

Previous articleமகளிர் டி20 உலக கோப்பை போட்டி- 6வது முறையாக சாம்பியனான ஆஸ்திரேலியா!
Next articleஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்- காலை 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!