அமைச்சர் உதயநிதியின் திட்டம் இதுதானா? டெல்லி பயணத்தால் ஏற்படும் மாற்றம்!

0
269
Is this the plan of Minister Udayanidhi? The change caused by a trip to Delhi!
Is this the plan of Minister Udayanidhi? The change caused by a trip to Delhi!

அமைச்சர் உதயநிதியின் திட்டம் இதுதானா? டெல்லி பயணத்தால் ஏற்படும் மாற்றம்!

தமிழகத்தின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார். அங்கு இவர் சில முக்கிய அமைச்சர்களின் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் அவருடைய துறை சார்பாக சில கோரிக்கைகளை முன் வைப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த முறை சென்னையில் நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி போலவே சர்வதேச போட்டிகளை சென்னையில் நடத்துவது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை வைப்பார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் முதல்வர் ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக உதயநிதி ஸ்டாலின் கட்சிக்கு செல்வாக்கு மிக்கவராக மாற்ற வேண்டும் என திட்டம் உள்ளது. அதனால் டெல்லியில் உதயநிதியின் செல்வாக்கை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக அவர் டெல்லி பயணம் மேற்கொண்டு உள்ளார் என கூறப்படுகின்றது.

அண்மையில் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தமிழ் மாணவர்கள் மீது ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினார்கள். காரல் மார்க்ஸ், லெனின் மற்றும் பெரியார் ஆகியோரின் படங்களையும் உடைத்து அவர்கள் சேதப்படுத்தினர்.

இதற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் டெல்லியில் பயிலும் தமிழ் மாணவர்களுடன் அமைச்சர் உதயநிதி வீடியோ கால் மூலமாக உரையாடினார். மேலும் டெல்லிக்கு தான் வரும்பொழுது அவர்களின் நேரில் சந்திப்பதாக உதயநிதி ஸ்டாலின் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படிக்கும் தமிழ் மாணவர்களையும் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பார் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த தாக்குதல் விவரம் தொடர்பாகவும் மத்திய அரசிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முறையிடுவார் என நம்பப்படுகிறது.

Previous articleஇந்த தாக்குதலை சகித்துக் கொள்ள முடியாது- சிங்கள கடற்படையினருக்கு எதிராக பாமக தலைவர் கண்டனம்!!
Next articleஇன்று முதல் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ 2000! அரசு வெளியிட்ட சூப்பர் அப்டேட்!