திருநங்கைகளுக்கு அடித்த ஜாக்பாட்! இனி மாதம் ரூ 1500!

Photo of author

By Parthipan K

திருநங்கைகளுக்கு அடித்த ஜாக்பாட்! இனி மாதம் ரூ 1500!

கடந்த தேர்தலின் போது திமுக மற்றும் அதிமுக என இரண்டு கட்சிகளும் பல்வேறு வகையான வாக்குறுதிகளை வழங்கியது. அதில் திமுகவானது நான் முதல்வன் திட்டம், மகளிர்களுக்கு அரசு பேருந்துகளில் கட்டணமில்லா பயணச்சீட்டு மற்றும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1௦௦௦  வழங்குதல் போன்ற வாக்குறுதிகளை வழங்கியது. எதிர்பார்த்தபடியே திமுக ஆட்சிக்கு வந்தது.

தொடர்ந்து மகளிர்களுக்கு அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லா பயண சீட்டு வழங்கும் திட்டம், நான் முதல்வன் திட்டம் போன்றவற்றை  அமல்படுத்தியது. இருப்பினும் தற்போது வரை குடும்பத் தலைவிகளுக்கு  மாதம் ரூ ஆயிரம் வழங்கும் திட்டம் அமலுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மக்களின் குறைகளை அறிந்து அதனை அதிகாரிகள் மூலம் நிவர்த்தி செய்ய முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த வகையில் திருநங்கைகளுக்கு மாதந்தோறும் உதவித் தொகையாக  ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றது. அதனை தற்போது  1500 ரூபாயாக உயர்த்தி வழங்க  முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து சமூகத்தால் புறக்கணிக்கப்படும் திருநங்கைகளுக்கு சமநிலையை அடைய வேண்டும் என்பதற்காக இந்த உதவி தொகை வழங்கப்படுகின்றது என கூறியிருந்தார்.

மேலும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டத்தை முதலில் மு க ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். மேலும் இன்று முதல்வர் முக ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாடுகின்றார். அதற்காக  காலை 9 மணியில் இருந்து தொடரந்து 3 மணி நேரம் நின்று தொண்டர்கள் மற்றும் கட்சி  தலைவர்களிடம் வாழ்த்துக்களை பெற்று கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.