இந்த சிம் வைத்திருப்பவர்களுக்கு வெளியான அதிர்ச்சி செய்தி! ரீசார்ஜ் கட்டணம் பல மடங்கு உயர்வு!
ஏர்டெல் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவரான சுனில் மெட்டல் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் ஏர்டெல் நிறுவனம் எப்போது மொபைல் போன் மற்றும் டேட்டா கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார். அண்மையில் ஏர்டெல் நிறுவனத்தின் குறைந்தபட்ச ரீசார்ஜ் ஆனது 28 நாட்கள் வேலிடேட் சேவையை 299 இருந்து சுமார் 57 சதவீதம் அதிகரித்து 155 ஆக நிர்ணயம் செய்தது.
அதனை தொடர்ந்து சமீபத்தில் நடைபெற்ற மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் நிகழ்ச்சியில் ஏர்டெல் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவரான சுனில் மெட்டல் கூறுகையில் விரைவில் நாடு முழுவதும் கட்டண உயர்வு நடைபெறும் என தெரிவித்தார். அவர் கூறியது போல கட்டண உயர்வு குறித்து அவரிடம் மீண்டும் கேட்டபோது பொதுமக்கள் மற்ற விஷயங்களுக்கு செலவிடும் செலவுகளை ஒப்பிடும்போது இந்த விலை உயர்வு குறைவாகத்தான் உள்ளது.
மேலும் பொதுமக்களின் தனிநபரின் சம்பளம் உயர்ந்துள்ளது, வாடகை உயர்ந்துள்ளது, கட்டண உயர் குறித்து யாரும் குறை கூறவில்லை என கூறியுள்ளார். மேலும் அதிக முதலீடுகளை ஏர்டெல் நிறுவனத்தில் போட்டுள்ளதாகவும் ஆனால் வருவாய் மிகக் குறைவாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
அதன் காரணமாகத்தான் மொபைல் டேட்டா மற்றும் பேசுவதற்கான ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணத்தை உயர்த்த உள்ளதாக கூறியுள்ளார். இதன் மூலமாக ஏர்டெல் குறைந்தபட்ச ரீசார்ஜ் ரூ 200 அல்லது ரூ 300 நிர்ணயம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் ஏர்டெல் பயனாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.