தங்கம் விலை தொடர் அதிகரிப்பு! நகை பிரியர்கள் அதிர்ச்சி!!
தங்கம் விலை கடந்த சில நாட்களாக பெரிய அளவில் மாற்றம் இன்றி காணப்பட்டது. ஆனால் சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இன்றும் ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. இதனால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.8 உயர்ந்து ரூ5,243க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.64 உயர்ந்து ஒரு சவரன் ரூ.41,944-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.20 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.70,000க்கு விற்பனையாகிறது.