சந்தன மரம் கடத்த காட்டுக்கு தீ!! வெளிவந்த திடுக்கிடும் உண்மை!!
அக்காமலை எனும் மலைப்பகுதி கோவை மாவட்டத்தில் உள்ளன. இப்பகுதியில் விலங்குகள் , புலிகள் இருப்பதால் இது வனத்துறையினர் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.
கடந்த 27 ஆம் தேதி ஆனைமலை புலிகள் காக்கும் வனப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. வெயில் காலம் என்றதால் காட்டு தீ மிகவும் வேகமாக பரவியது.
வனத்துறையினர் மூன்று நாட்கள் கடின முயற்ச்சி எடுத்து போராடி தீயை அணைத்தனர்.
இந்த நிலையில் பொள்ளாச்சி வனப்பகுதியில் சாக்கு முட்டையில் 16 கிலோ சந்தன மரங்களுடன் கள்ளக்குறிச்சியை சேர்ந்த ராஜீவ் காந்தி பிடிபட்டார்.
விசாரணையின் போது உண்மை தெரிந்தது, காட்டுக்கு தீ வைத்து வனத்துறையினரின் கவனத்தை திசை திருப்பி சந்தன மரத்தை வெட்டி கடத்துவது தான் ராஜீவ் காந்தியின் திட்டம்.
பிடிபட்ட 16 கிலோ சந்தன மரத்துடன் ராஜீவ் காந்தியை அரசாங்கத்திடம் ஒப்படைத்தனர்.