மூன்று ஆண்டுகள் கழித்து ஜல்லிக்கட்டு!! நாமக்கல்லில் பொதுமக்கள் உற்சாகம்!!

Photo of author

By Parthipan K

மூன்று ஆண்டுகள் கழித்து ஜல்லிக்கட்டு!! நாமக்கல்லில் பொதுமக்கள் உற்சாகம்!!
நாமக்கல் மாவட்டம் சேதமங்கலத்தில் மூன்று ஆண்டுகள் கழித்து நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.
ஜல்லிக்கட்டு போட்டியை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சேதமங்கலத்தை அடுத்த காந்திபுரத்தில் இருந்து நைனாமலை செல்லும் சாலையில் அமைக்கப்பட்டுள்ள திடலில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.
நாமக்கல் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான காளைகளும், மாடுபிடி வீரர்களும் போட்டியில் பங்கேற்க உள்ளன. நாமக்கல்லில் ஆண்டு தோறும் ஜல்லிக்கட்டு விழா நடைபெறுவது வழக்கம்,கொரோனா காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு விழா இப்பகுதியில் நடைபெறாமல் இருந்தது.
ஜல்லிக்கட்டு போட்டி ஏற்பாடுகளை எம்பி ராஜேஷ் குமார், டிஎஸ்பி சுரேஷ் நேற்று ஆய்வு செய்தன.
ஜல்லிக்கட்டு போட்டியில் 400 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
3 வருடங்களுக்கு பின் சேதமங்கலத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதால், காளைகளை களம் இறக்க அதன் உரிமையாளர்கள் ஆர்வத்துடன்  வருகின்றன.