பயிற்சியாளர் முன் சட்டையைக் கழட்டிவிட்டு நின்ற வீரர்: விதிக்கப்படுமா தடை?

Photo of author

By Parthipan K

பயிற்சியாளர் முன் சட்டையைக் கழட்டிவிட்டு நின்ற வீரர்: விதிக்கப்படுமா தடை?

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மல் பயிற்சியாளர் தன்னை நீக்கியதை அடுத்து அவரிடம் தகராறு செய்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர்களில் ஒருவராக விளங்கும் உமர் அக்மல் எப்போதும் சர்ச்சைகளுக்குப் பெயர் போனவர். இவர் கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தான் அணியில் இடம் கிடைக்காமல் உள்ளூர் போட்டிகளில் விளையாண்டு வருகிறார்.

இந்நிலையில் இப்போது தனது உடற்பயிற்சி வல்லுனர் ஒருவருடன் தகராறு செய்து மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். உலக அளவில் இப்போது அனைத்து கிரிக்கெட் விளையாடும் நாடுகளும் தங்கள் வீரர்களின் உடற்தகுதியில் கவனம் செலுத்தி வருகின்றது. இதற்காக பல கடினமான தேர்வுகளை வைத்தே வீரர்களை அணிக்குள் எடுத்துக் கொள்கிறது.

இதுபோல உடற்பயிற்சி சோதனையின் போது உமர் அக்மல் உடலில் கொழுப்பு அதிகமாக இருப்பதாக சொல்லி அவரது பயிற்றுனர் அவரை நிராகரிக்க கோபமான அக்மல் ஆடையைக் கழட்டி ‘எங்கே கொழுப்பு இருக்கிறது எனக் காட்டுங்கள் ‘ என சொல்லி அவரிடம் தகராறு செய்துள்ளார். இதனால் கடுப்பான பயிற்றுனர் வாரியத்திடம் முறையிட உமர் அக்மல் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

அதிகபட்சத் தண்டனையாக அடுத்த 6 மாதங்களுக்குப் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.