ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! இந்த தேதிகளில் வங்கிகள் இயங்காது!

Photo of author

By Parthipan K

ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! இந்த தேதிகளில் வங்கிகள் இயங்காது!

ரிசர்வ் வங்கியானது மாதந்தோறும் அடுத்த மாதத்திற்கான விடுமுறை நாட்களில் பட்டியலிட்டு வெளியிடும் அந்த வகையில் அந்தந்த மாநிலத்திற்கு ஏற்ப பண்டிகைகள் கொண்டாடப்படுவதுயொட்டி விடுமுறை நாட்கள் விடப்படும். அந்த வகையில் நாடு முழுவதில் உள்ள வங்கிகளில் விடுமுறை பட்டியலை மாதத்தின் முந்தைய மாதத்திற்கு இறுதி நாளில் ரிசர்வ் வங்கியானது வெளியிடும்.

அதன் அடிப்படையில் மார்ச் மாதத்திற்கான விடுமுறை பட்டியலை வெளியிட்டது. அதாவது இந்த மாதத்தில் வார இறுதி நாட்கள் உட்பட பண்டிகை காலங்களுடன் சேர்த்து 12 நாட்கள் விடுமுறை விடப்பட உள்ளது நிலையில் தற்போது மார்ச் மாத வங்கி விடுமுறை பட்டியலை குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த அறிவிப்பில் கடந்த மார்ச் மூன்றாம் தேதி சப்சார் விடுமுறை, நேற்று ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை, மார்ச் 7 ஹோலிகா தஹன், மார்ச் 8 துலேதி மற்றும் டோல்ஜத்ரா,ஹோலி, மார்ச் 9 ஹோலி பண்டிகை, மார்ச் 11 மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை, மார்ச் 12 ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை,

மார்ச் 19 ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை, மார்ச் 22 குடிபத்துவா, யுகாதி மற்றும் பீகார் நாள், சஜிபு, நோங்மபான்பா, தெலுங்கு புத்தாண்டு, மார்ச் 25 நான்காவது  சனிக்கிழமை, மார்ச் 26 ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை, மார்ச் 30 ஸ்ரீ ராமநவமி என ஒவ்வொரு பண்டிகைக்கும் அந்தந்த  மாநிலத்திற்குரிய வங்கிகளுக்கு விடுமுறை அறிவித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வங்கி விடுமுறை நாட்களைத் தவிர மீதமுள்ள நாட்களில் வங்கிகள் வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.