திமுகவிற்கு ஆண்மையும் இல்லை! ஆளுமையும் இல்லை – ஐ.எஸ்.இன்பதுரை 

Photo of author

By Parthipan K

திமுகவிற்கு ஆண்மையும் இல்லை! ஆளுமையும் இல்லை – ஐ.எஸ்.இன்பதுரை 

திமுக அரசு ஆன்லைன் ரம்மி மீது தடை  தீர்மானம் கொண்டு வராமல் காலம் கடத்தி விட்டு, ஆளுநர் மீது பழி போடுகிறார்கள் என்று அதிமுக தேர்தல் பிரிவு துணைச் செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை குற்றம் சாட்டியுள்ளார்.

கீழ்கட்டளையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக தேர்தல் பிரிவு துணைச் செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை மாட்டை தொழுவத்தில் தான் கட்ட வேண்டும் சட்டமன்றத்தில் கொண்டு வந்து கட்ட முடியாது. 

ஏனென்றால் மரபு அதுக்கு ஒத்து வராது அதே போல தான் எதிர்க்கட்சி தலைவர் அருகில் துணைத் தலைவரை அமர வைக்க வேண்டும் என்று அதிமுக கொடுத்த தீர்மானத்தை நிறைவேற்றாமல் காலம் கடத்துகிறார் விடியா திமுக அரசின் சபாநாயகர் அப்பாவு என ஐ.எஸ்.இன்பதுரை தெரிவித்தார். 

மேலும் தினந்தோறும் இரண்டு உயிர்கள் பலியாகிறது, திமுக அரசு ஆன்லைன் ரம்மி மீது தடை  தீர்மானம் கொண்டு வராமல் காலம் கடத்துகின்றனர். இதற்கு ஆளுநர் கையெழுத்து போட மறுக்கிறார் என அவர் மீது பழி போட்டு வருகிறார்கள்.

ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கு  திமுகவிற்கு ஆண்மை இல்லை ஆளுமையும் இல்லை என ஐ.எஸ்.இன்பதுரை கடுமையாக குற்றம் சாட்டினார்..