மீண்டும் ஒலிபெருக்கியின் மூலமே அறிவிப்பு! சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகள் உற்சாகம்!

0
147
loudspeaker-announcement-again-passengers-excited-at-chennai-central-railway-station
loudspeaker-announcement-again-passengers-excited-at-chennai-central-railway-station

மீண்டும் ஒலிபெருக்கியின் மூலமே அறிவிப்பு! சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகள் உற்சாகம்!

ஒலி மாசுவை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஒலிபெருக்கியின் மூலம் அறிவிப்பு வெளியிடுவது சோதனை முயற்சியாக நிறுத்தப்பட்டது. மேலும் ஒலிபெருக்கியின் மூலம் அறிவிப்பு வெளியிடுவது நிறுத்தப்பட்டதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் எழுந்தது.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்ட ஒலிபெருக்கி அறிவிப்பு முறையை மீண்டும் தொடங்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் கோரிக்கை விடுத்திருந்தனர். அதற்கு முன்பே புறநகர் ரயில் நிலையத்தில் ரயில் புறப்படும் உள்ளிட்ட தகவல் குறித்து அறிவிப்புகள் ஒளிபரப்பியின் மூலம் அறிவிக்கப்படும் என்றும் மத்திய ரயில் நிலையத்தில் ஒலிபெருக்கியின் மூலம் அறிவிப்பு அகற்றப்பட்டது.

சோதனை முயற்சி தான் என்று இனி விளம்பரம் தொடர்பான ஆடியோக்கள் ஒளிபரப்படாது என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து தற்போது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மீண்டும் ஒலிபெருக்கியின் மூலம் அறிவிப்பு வெளியிடப்படுகிறது என  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாற்றுத்திறனாளிகள், பார்வை இழந்த பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாற்றுத்திறனாளிகளின் தொடர் கோரிக்கையின் காரணமாக மீண்டும் ஒலிபெருக்கி இயக்கப்படுகிறது என தகவல் பரவி வருகிறது.