அதிமுக வை முழுவதுமாக ஆள அண்ணாமலையின் புதிய சூழ்ச்சி!! போட்ட வலையில் வசமாக சிக்கிய எடப்பாடி!!

0
364
Annamalai's new strategy to completely rule AIADMK!! Edappadi caught in the net!!
Annamalai's new strategy to completely rule AIADMK!! Edappadi caught in the net!!

அதிமுக வை முழுவதுமாக ஆள அண்ணாமலையின் புதிய சூழ்ச்சி!! போட்ட வலையில் வசமாக சிக்கிய எடப்பாடி!!

ஈரோடு மாவட்டம் கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக பின்னடைவை சந்தித்ததும் எடப்பாடி அணியினர் பலர் கட்சியிலிருந்து வெளியேறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அதற்கு மாறாக பாஜகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் பலர் ஒருவர் பின் ஒருவராக அண்ணாமலையை குற்றம் சாட்டி எடப்பாடி அணிக்கு தாவி வருகின்றனர்.

அந்த வகையில் முதலில் பாஜகவின் ஐடி விங் தலைவராக இருந்தவர்தான் நிர்மல் குமார், இவர் தற்பொழுது அண்ணாமலை மீது குற்றம்சாட்டி,சொந்தக் கட்சியில் இருப்பவர்களை வேவு  பார்த்து அல்ப்ப சந்தோஷத்தை ஏற்படுத்திக் கொள்வதாகவும் அதேபோல 2019 இல் இருந்து கட்சி 20 சதவீதம் கூட வளரவில்லை. அதை பற்றி கவலை இல்லாமல் இருப்பது குறித்தும், இதனை எல்லாம் எடுத்துக் கூற முயன்றும் நாங்கள் அனைவரும் தோல்வியுற்றது தான் மிச்சம் என்றவாறு கூறி தனது அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்வதாக தெரிவித்து எடப்பாடி அணியில் இணைந்தார்.

இவர் வெளியேறியதை அடுத்து அதே ஐடி பிரிவு மாநில செயலாளர் திலீப்பும் அண்ணாமலை மீது அடுக்கடுக்கான குற்றங்களை சூட்டி கட்சியில் இருந்து வெளியேறுவதாக கூறி ஈபிஎஸ் அணியில் இணைந்தார். இவர்களைத் தொடர்ந்து பாஜக நிர்வாகிகள் பல எடப்பாடி அணையில் இணைந்து வரும் சூழலில் இது அண்ணாமலைக்கு பெரும் அடியாகவே இருக்கும்.

அதுமட்டுமின்றி பாஜகவின் காலியாக இருக்கும் முக்கிய பொறுப்பிற்கு யாரை அமர வைக்க போகிறார் என்பதில் பெரிய குழப்பம் நிலவியுள்ளது. பாஜக கட்சிக்குள் என்னதான் நடக்கின்றது என்பது புரியாமல் நிர்வாகிகள் பலரும் பல விமர்சனங்கள் பேசி வரும் இந்த சூழலில் அண்ணாமலை மட்டும் அமைதியான முறையில் அவர்கள் கட்சியை விட்டு விலக்கியதற்கு, உங்களது பணி எங்கு சென்றாலும் சிறக்கட்டும் என கூறியுள்ளார்.

இதை வைத்து பார்க்கையில் இவரே அவர்களை அதிமுகவிற்கு அனுப்பி வைத்தது போல உள்ளது.தற்பொழுது நடந்து முடிந்த ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.ஆனால் அதிமுக இரு அணிகளாக மோதி கொண்டிருந்த சூழலில்  பாஜக அக்கட்சியை முழுவதுமாக கைப்பற்றிவிட வேண்டும் என்ற பாணியில் சிந்தனை வைத்தருந்தது.அதற்கேற்றாற் போல பல செயல்களும் இருந்த நிலையில், மகாராஷ்டிராவில் நடந்தது போல அதிமுகவில் ஓர் ஏக்நாத் ஷிண்டே வை உருவாக்க இவர்களை திட்டம் போட்டு அனுப்பி வைத்திருக்கலாம் என கூறுகின்றனர்.

Previous articleஆசிரியர்கள் வெளியிட்ட ஷாக் நியூஸ்! 100 சதவீத தேர்ச்சிக்காக பொதுத்தேர்வில் பார்த்து எழுத அனுமதி!
Next articleவிவசாயிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இந்த தேதிக்குள் காப்பீட்டுத் செய்ய விண்ணப்பிக்க வேண்டும்!