சற்றுமுன்: இனி விவோ ஒன் பிளஸ் செல்போன்களுக்கு தடை!! மத்திய புலனாய்வுத்துறையின் திடீர் உத்தரவு!!

Photo of author

By Rupa

சற்றுமுன்: இனி விவோ ஒன் பிளஸ் செல்போன்களுக்கு தடை!! மத்திய புலனாய்வுத்துறையின் திடீர் உத்தரவு!!

இந்தியா மற்றும் சீனா எல்லைக்கிடையே பல நாட்களாக மோதல் நடந்து வரும் நிலையில் பல வகைகளில் சீனா நம்மை கண்காணித்து வருவதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சீன ராணுவ வீரர்கள் இந்திய வீரர்களை தாக்கினர். இதனால் சீனா மற்றும் இந்தியா எல்லைக்கிடையே மோதல் ஏற்பட்டது.இதில் இந்திய வீரர்கள் பலர் பலியானர்.

இதனையடுத்து உடனடியாக மத்திய அரசானது  சீன செயலிகள் அனைத்திற்கும் ஒட்டுமொத்தமாக தடை விதித்து உத்தரவிட்டது. அதாவது டிக் டாக், விஜாட் உள்ளிட்ட பல செயலிகள் உட்பட எந்தெந்த நாடுகள் சீனவுடன் கைகோர்த்து செயலியை வெளியிட்டுள்ளது அவ்வகையான ஆப்களுக்கும் நிரந்தர தடை விதித்தது.

தற்போது மத்திய உளவுத்துறை அமைப்பானது மீண்டும் இந்திய ராணுவ வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், சீனா மொபைல்களை இந்திய ராணுவத்தினர் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பயன்படுத்த வேண்டாம் என கூறியுள்ளனர். அந்த சீன மொபைல்களில் உளவு மென்பொருள் ஏதேனும் வைத்திருக்கலாம் என மத்திய புலனாய்வு அமைப்பானது கூறியுள்ள நிலையில் இவ்வாறு சீனா தயாரிப்பு செல்போன்களை பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே சீனா தயாரிக்கும் ஜியோமி, விவோ, ஓபோ, ஒன் பிளஸ், ஹானர், ரியல் மீ உள்ளிட்ட நிறுவனங்கள் கொண்ட செல்போனை உபயோகிக்க வேண்டாம் என கூறியுள்ளனர். இவ்வாறு சீன செயலிகள் மூலம் தங்களை வேவு பார்ப்பதாக தகவல்கள் வந்த நிலையில் மத்திய அரசு ஆனது அதற்கு முற்றிலும் தடை விதித்தது.அதேபோல தற்போது சீன மொபைல்கள் மூலம் இவ்வாறு நடக்கலாம் என கூறியுள்ள நிலையில் அவர்கள் குடும்பத்தினருக்கும் மத்திய உளவுத்துறை ஆனது தற்பொழுது எச்சரிக்கை விடுத்துள்ளது.