இன்று முதல் வழக்கம் போல் இங்கு ரயில் சேவை! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!

0
219
Train service here as usual from today! Southern Railway announced!
Train service here as usual from today! Southern Railway announced!

இன்று முதல் வழக்கம் போல் இங்கு ரயில் சேவை! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது. அதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை. அதன் காரணமாக போக்குவரத்து சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருந்தது. மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனாவின் தாக்கம் குறைந்த நிலையிலும் மக்கள் அதிக கூட்ட நெரிசல் இருக்கும் இடங்களில் செல்வதற்கும், பேருந்து மற்றும் ரயில்களில் பயணம் செய்வதற்கும் அச்சமடைந்து வந்தனர்.

அதனைத் தொடர்ந்து கொரோனா பரவல் முற்றிலும் குறைய தொடங்கிய பிறகு தான் ரயில் மற்றும் பேருந்துக்களில் பயணம் செய்ய படிப்படியாக மக்கள் தொடங்கினார்கள். மேலும் பேருந்து விட பெரும்பாலானோர் ரயில் பயணத்தை விரும்பினார்கள். அதனால் தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில், வாராந்திர ரயில் மற்றும் பண்டிகை நாட்களில் அனைத்து பகுதிகளுக்கும் சிறப்பு கட்டண ரயில் இயக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் கடந்த ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும் சிறப்பு ரயில் கூடுதலாகவே இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த டிசம்பர் மாதத்தில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் ரயில் பாதைகள் சேதம் அடைந்தது. அதனால் ஆங்காங்கே தண்டவாளம் பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது. அதனால் ஒரு சில பகுதிகளுக்கு ரயில் பகுதி நேரமாகவும் ரத்து செய்யப்பட்டது.

முக்கிய பகுதிகளுக்கு மாற்று பாதையில் இயக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் தற்போது தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில் மதுரை ரயில் நிலையத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு தினந்தோறும் ரயில்வே இயக்கப்பட்டு வருகின்றது. மேலும் திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை ஆகிய ரயில் தடங்கள் வழியாக இயக்கப்படும் ரயில்கள் கடந்த ஒரு சில வாரங்களாக முற்றிலும் ரத்து செய்யப்பட்டிருந்தது.

இரட்டை ரயில் பாதை இணைக்கும்  பணிகள் கடந்த 27 நாட்களாக நடைபெற்று வந்ததால் தான் இந்த ரயில்கள் ரத்து செய்யப்பட்டது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்நிலையில் பராமரிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் புதிய ரயில் பாதைகள் இணைப்பு மற்றும் காலி  ரயில் பெட்டிகளை ரயில் நிலையத்திலிருந்து எடுத்துச் செல்லும் புதிய பாதைகள் மற்றும் புதிய நடை மேடை  அமைக்கும் பணிகள் அனைத்தும் நேற்றுடன் முடிவடைந்தது அதனால் இன்று முதல் வழக்கம் போல மதுரை வழித்தடம் மூலம் ரயில்கள் இயக்கப்பட உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleமருத்துவர் பணிக்கு தமிழ் தகுதி தேர்வில் தேர்ச்சி கட்டாயம்? உயர் நீதிமன்றம் மதுரை கிளை வெளியிட்ட அதிரடி உத்தரவு?
Next articleசற்றுமுன்: இனி விவோ ஒன் பிளஸ் செல்போன்களுக்கு தடை!! மத்திய புலனாய்வுத்துறையின் திடீர் உத்தரவு!!