சிம்புவின் திருமணம் குறித்து வெளிவந்த முக்கிய தகவல்! இணையத்தில் வைரலாக்கி வரும் ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிம்பு இவர் தற்போது வரை சிங்கிளாகவே இருக்கின்றார். இவரது படம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அது ஒரு பக்கம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரும் நிலையில் தற்போது அவருடைய திருமணம் பற்றிய செய்திகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
சிம்புவின் பத்து தல படத்தின் டிரைலர் அண்மையில் வெளியானது. மேலும் படம் வரும் மார்ச் 30 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. அந்த படத்தை காணவும் ரசிகர்கள் மிக ஆர்வமுடன் காத்துக்கொண்டுள்ளனர். இந்நேரத்தில் தான் சிம்பு தனது 48வது படம் குறித்து டுவிட் செய்துள்ளார். அதில் முன்பு கொடுத்த ஒரு பேட்டி வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில் தானே அடுத்த படத்தை இயக்கம் முடிவில் இருக்கிறேன் எனவும் கூறியுள்ளார்.
இதனால் சிம்புவின் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். அவரது 48 வது படம் எப்படி இருக்கும் எனவும் காத்துக் கொண்டுள்ளனர். சிம்புவின் தீவிர ரசிகரான தன்னை அடையாளப்படுத்திய வரும் கூல் சுரேஷ் பத்து தல படத்திற்காக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 108 தேங்காய் உடைத்து வேண்டுதல் செலுத்தினார்.
அப்போது அவர் பத்திரிகையாளர்களிடம் பேசும் பொழுது நடிக்க சிம்புவிற்கு திருமணம் என ஒன்று நடந்தால் பத்திரிக்கையாளர்கள் மற்றும் அவரது ரசிகர்கள் முன்னிலையில் தான் நடக்கும் அப்படி தான் டி ராஜேந்திரன் சிம்புவை பொறுப்புடன் வளத்துள்ளார் எனவும் கூறியிருந்தார்.