குரூப் 4 தேர்வு முடிவுகள் இந்த தேதியில் வெளியிடப்படும்? டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய தகவல்
குரூப் 4 தேர்வானது கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித்தண்டலர், நில அளவையர், வரைவாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், உள்ளிட்ட பதவிகளுக்கும், 73௦1 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. மேலும் இந்த காலி பணியிடங்களை நிரப்ப தேர்வானது கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24 ஆம் தேதி நடைபெற்றது.
இந்த தேர்வை சுமார் 18 லட்சத்து 50 ஆயிரத்து 471 பேர் எழுதினார்கள். இந்த தேர்வின் முடிவுகள் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்ப்பில் தேர்வர்கள் காத்துக் கொண்டுள்ளனர். தேர்வை நடத்திய டிஎன்பிஎஸ்சி இதுவரை கடந்த அக்டோபர், டிசம்பர் மற்றும் பிப்ரவரி என மூன்று முறை தேர்வு முறைகள் வெளியிடுவது தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டது.
ஆனால் அந்த அறிவிப்பின்படி தேர்வு முடிவுகள் வெளியிடவில்லை. தற்போது நான்காவது முறையாக மார்ச் மாதத்தில் இறுதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என முன்னதாகவே அறிவித்திருந்தது. இதனால் தேர்வர்கள் கடும் மன உளைச்சல் அடைந்துள்ளனர். தேர்வை சந்தித்ததை விட தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு தான் பெரிய அளவில் பாதிப்பை தருவதாக தேர்வர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் நேற்று முன்தினம் குரூப் 4 தேர்வு முடிவை வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்து ட்விட்டரில் ஹேஷ்டேக் செய்தனர்.
மேலும் தேர்வு முடிவு வெளியிடவில்லை என மீம்ஸ் போட்டும் தேர்வார்களின் வேதனையை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் குரூப் 4 இல் அடங்கிய பணிகளுக்கான தேர்வினை கடந்த ஜூலை 24ஆம் தேதி நடைபெற்ற.
இந்த தேர்வின் முடிவுகள் குறித்து தேர்வாணையத்தால் பிப்ரவரி 14ஆம் தேதி அன்று வெளியிடப்பட்ட விரிவான செய்தி குறிப்பில் தெரிவித்ததன் படி தேர்வு முடிவுகள் தொடர்பான பணிகள் தற்போது தேர்வாணையத்தால் துரிதமாக நடைபெற்று வருகின்றது.தேர்வின் முடிவுகள் இம்மாதம் இருதயத்தில் வெளியிடப்படும் என்றும் மீண்டும் தேர் அவர்களின் கனிவான தகவலுக்கான தெரிவிக்கப்பட்டுள்ளது.