திருப்பதி செல்ல இருக்கின்றீர்களா? உங்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய தகவல்!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா காரணமாக கோவிலில் நேரடி டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டது. அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் ரூ.300 டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வந்தது. அந்த வகையில் டிக்கெட் முன்பதிவு தொடங்கி சில மணி நேரத்திலேயே அனைத்தும் முன்பதிவு ஆகிவிடுவதினால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகினார்கள்.
அதனால் முன்கூட்டியே தரிசனம் செய்ய டிக்கெட் குறித்து விவரங்கள் இணையதளத்தில் தேவஸ்தானம் சார்பில் வெளியிடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மார்ச் 22ஆம் தேதி யுகாதி தெலுங்கு வருட பிறப்பு ஆஸ்தானம் நடைபெற உள்ளது. வழக்கமாக நடைபெறும் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை மற்றும் அர்ஜித்தா பிரம்மோற்சவம் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற இருக்கின்றது. அதனை தொடர்ந்து மார்ச் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் விஐபி தரிசனமும் ரத்து செய்யப்பட்டுள்ளது என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதனால் அந்த தேதிகளை பக்தர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் திருப்பதி தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.