தமிழக பாஜகவினருக்கு தேசிய தலைவர் நட்டா திடீர் உத்தரவு
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அதிமுகவில் பாஜக நிர்வாகிகள் பலர் இணைந்தது பற்றி மாநில தலைவர் அண்ணாமலை தங்களது நிர்வாகிகளை அழைத்து கட்சி நடத்த வேண்டிய நிலை திராவிட கட்சிகளுக்கு உள்ளதாக கடுமையாக விமர்சித்து வந்ததையடுத்து எடப்பாடி பழனிசாமியின் உருவ பொம்மை எரிப்பு சம்பவங்கள் நடைபெற்றன.
இதனால் இரு கட்சிகளின் நிர்வாகிகள் இடையே கடுமையான வார்த்தை போர் உருவாகியது. மேலும் கூட்டணிக்குள் சலசலப்பையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில் பாஜக தேசிய தலைவர் நட்டா கடந்த 10-ம் தேதி தமிழகம் வருகை புரிந்தார். அவர் கிருஷ்ணகிரியில் கட்சி சம்பந்தமான பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, தமிழக கட்சி நிர்வாகிகளுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தி, பல கண்டிப்பான உத்தரவுகளை கட்சியினருக்கு பிறப்பித்தார்.
அதிமுகவுடன் சுமுகமான உறவை மேற்கொள்ள வேண்டும்.
அதிமுக தலைமை குறித்தோ அல்லது தொண்டர்கள் குறித்தோ யாரும் எவ்விதமான குறைகளையும் சொல்லக்கூடாது.
தலைமை பிறப்பித்திற்கும் இந்த உத்தரவினை, பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கட்டாயம் பின்பற்றி நடக்க வேண்டும்.
இந்த உத்தரவை மீறி யாரும் நடந்து கொள்ளக்கூடாது என தனது கட்சியினருக்கு , தேசிய தலைவர் நட்டா கட்டாய உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நட்டாவின் இந்த உத்தரவின் மூலம், வருகின்ற 2024 ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன், பாஜக கூட்டணி தொடரும் என்பது தெளிவாக தெரிகிறது.
நட்டாவின் இந்த உத்தரவிற்கு தலை வணங்குவது போல தமிழக பாஜகவினர், கடந்த இரண்டு நாட்களாக அமைதி காத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.