புதிய வைரஸ் பரவல்! பள்ளிகளுக்கு 10 நாட்கள் தொடர் விடுமுறை!
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினார்கள். கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் முற்றிலும் குறைந்த நிலையில் தற்போது நாட்டின் பல்வேறு மாநிலங்களில் புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகின்றது. இன்புளூயன்சா ஏ வைரஸ் இன் துணை வகையான இந்த வைரஸ் எச்3என்2 என கூறப்படுகின்றது.
இந்த புதிய வகை வைரஸ் 15 வயது உட்பட்ட குழந்தைகள் மற்றும் முதியோரை தான் அதிகம் தாக்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும் இதுபோல புதுவையில் புதிய வைரஸ் பரவல் காரணமாக தற்போது சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லாததால் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்கின்றார்கள்.
இந்த புதிய வைரஸ் பரவலினால் மாணவ மாணவிகள் காய்ச்சலால் அதிக அளவு பாதிக்கப்படுவதால். எல்கேஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை விடுமுறை அளிக்க வேண்டும் என நேரு எம்எல்ஏ சட்டசபையில் வலியுறுத்தி இருந்தார். மேலும் புதுச்சேரி மாநிலத்தில் ஆரம்பப்பள்ளி முதல் எட்டாம் வகுப்பு வரை 10 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது என சட்டசபையில் கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.